உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எதிர் நீச்சல்!* கவுரவர்கள் வாழ்ந்தஉலகில் தான்பாண்டவர்களும் வாழ்ந்தனர்!* பொய்யர் நிறைந்தபூவுலகில் தான்அரிச்சந்திரனும் வாழ்ந்தார்!* நரகர்கள் வாழ்ந்தஉலகத்தில் தான்தேவர்களும் கோலோச்சினர்!* அரக்கர்கள் வாழும்இவ்வுலகில் தான்அறிஞர்களும் வாழ்கின்றனர்!* வஞ்சகர்கள் சூழ்ந்தஉலகில் தான்விஞ்ஞானிகளும் உலா வருகின்றனர்!* பேதைகள் நிறைந்தநாட்டில் தான்மேதைகளும் இருக்கின்றனர்!* துரோகிகள் நிரம்பியசமூகத்தில் தான்தியாகிகளும் தலை நிமிர்கின்றனர்!* புல்லுக்கு ஓடும்மழை நீர் தான்நெல்லுக்கும் ஓடுகிறது!* சேற்றில் விழும்சூரிய ஒளிதான்செந்தாமரையிலும் ஒளிர்கிறது!* மனிதா...வாழ்க்கைச் செடி என்பதுரோஜா மட்டுமல்ல...அதன் முள்ளையும் சேர்த்துத்தான்!— கா.முத்துச்சாமி, தொண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !