உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காத்திருக்கிறது காலம்!* தோள்கள் வலிக்கபூ மாலைகளைதூக்கிச் சுமக்கின்றனர்!* முகமெல்லாம் பூரிக்கரத்தினக் கம்பளம் விரித்துமுதன்மை படுத்தப்படுகின்றனர்!* பொன், பொருள், புகழ்அவர்களை மட்டும் தேடி...* நம்மைப் போன்றோர்தானே அவர்களும்...உலகம் ஏன்அவர்களை மட்டும்அடையாளம் கண்டுகொண்டுஆராதிக்கிறது இப்படி?* நமக்கு மட்டும் ஏன் இல்லை?புரியாமையால் பலர்,பொறாமையில் சிலர்!* ஆராதிக்கப்படுபவர்கள்அவதாரங்கள் அல்ல!அவர்கள்...உருவாக்கப்பட்டவர்களல்ல...உரமேற்றப்பட்டவர்கள்!* அவர்கள்...அவதரித்த நாள் தொடங்கிதமக்குள் தங்களைத் தேடிபூமிக்குள் புதையல் போல்புதைந்து கிடந்தவர்கள்!* வெளிப்பட்ட நொடி தொடங்கிதங்களுக்குத் தாங்களேபட்டை தீட்டிக் கொண்டுபரிமளித்தனர் வைரமாய்!* தோள்களில் தவழும் அவர்களின்மாலைகளை விலக்கினால்மறைந்து கிடக்கும்வடுக்களைப் பார்க்கலாம்!அவைஅனுபவங்களின் அடையாளங்கள்!* அனுதினம்புகழைச் சுமப்பவர்கள்ஆதியில்போராட்டங்களைச் சுமந்தவர்கள்!கவுரவங்களுக்காகதங்களைக் காவு தந்தவர்கள்!* எல்லை மீறிய பொறுமைஎல்லாவற்றிலும் உண்மைஇருந்தால்...எவர்க்கும் மகுடம் சூட்டகாத்திருக்கிறது காலம்!— நாராயணன், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !