கவிதைச்சோலை!
என்றாவது ஒருநாள்!* என்றாவது ஒரு நாள்நீ வந்து அமர்வாய் என்பதற்காகவேஎன் உயிர் மரம்கிளை விடுத்து, இலை பரப்பிநிழல் தழைத்துகாத்துக் கிடக்கிறது!* உனக்குத் தெரியுமா...என்னை கடந்து நீசெல்கிற ஒவ்வொரு முறையும்இன்றாகிலும் அமர்ந்து விடுவாய்என்ற நம்பிக்கையில்என் மனக்கிளைசிலிர்த்தெழுந்துஅவசர அவசரமாய்காற்றில் அசைந்து, தூசு தட்டிக் கொள்வதை!* இலைக்கரங்கள்சலசலவெனகரவொலி எழுப்பிகளைத்து அமர்வதும்...* வழக்கம் போலவேஎன்னை நீநிராகரித்துச் செல்கையில்இரவில் பனியாய்அழுது தீர்வதும்...பகலில் தனியாய்புலம்பி சோர்வதும்!* உனக்கான காத்திருத்தலில்என் இலை முடி நரைத்துஉடல் இளைத்துநான் மொட்டையாய் நிற்கையிலும்என் விலாவின் ஓரம்உனக்கென ஒரு பொந்தில்இடம் போட்டு வைத்திருப்பேன்!* அதில் நீராஜகுமாரியின் முத்துமாலையைகொண்டு வந்து போட வேண்டாம்...நீ உட்கார்ந்து பறக்கிற போதில்உதிர்த்துவிட்டு செல்கிறஒற்றைச் சிறகு போதும்!* அது எனக்கு...நீராகும் நிலமாகும்உரமாகும் உயிராகும்வேராகும் விழுதாகும்!* மீண்டும் ஒரு மழைநாளில்உயிர்த்தெழுந்து...கிளை விடுத்து, இலை பரப்பிநிழல் தழைத்து காத்துக் கிடப்பேன்என்றாவது ஒரு நாள்நீ வந்து அமர்வாய் என்பதற்காகவே!— ஞானதாசன், வடக்குப்பாளையம்.