உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தீபஒளி ஏற்றிடுவோம்!* கங்கா ஸ்நானம் செய்துபுத்தாடை உடுத்திபலகாரங்களை உண்டுபட்டாசு வெடித்தலேதீபாவளி நன்னாள் எனும்நினைப்பை கொளுத்துவோம்!* ஒலியால் செவிக்கும்ஒளியால் விழிக்கும்பாதிப்புண்டாக்கும்பட்டாசுகளை வெடிப்பதால்கரியாவது காசு மட்டுமல்ல...வளி மண்டலமும் தான்!* ஓசோன் ஓட்டையாலும், 'குளோபல் வார்மிங்'காலும்,கொதிக்கும் வெப்பத்தில்கந்தகப்புகை கலந்துநச்சாக்கிடும் வேலையைஅறவே நசுக்கிடுவோம்!* புத்தாடையின் திருப்திநாம் அணிவதில் மட்டுமல்ல...வறியவர்களுக்கு வழங்குவதிலுமுள்ளதுஅவர்களின் வாழ்த்துகளையேபுத்தாடையாய் அணியப் பழகுவோம்!வசதியற்றவர்களோடு பலகாரங்களைபகிர்ந்து கொள்வோம்...வயிறு நிறைந்துவாயார வாழ்த்துவதையேஇனிப்பாய் உண்போம்!* தீபாவளி பெயரால்ஆடம்பரமாய் செலவிடும்பட்டாசுக்கான பணத்தைஆதரவற்றவர்களுக்குஉடையாய், உணவாய் வழங்கிடுவோம்!அவர்களின் நன்றி வாழ்த்தொலியையேபட்டாசொலியாய்பாவித்து மகிழ்வோம்!* அரக்கன் அழிவைஆர்ப்பாட்டமாய் கொண்டாடுதலுக்குபதிலாக, ஏழைகளுக்குதவிடுவோம்அவர்கள் வாழ்வில்,'தீப ஒளி' ஏற்றிடுவோம்!— எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !