கவிதைச்சோலை!
பரிணாம வளர்ச்சி!புழுதி பறந்த மண்சாலைகள் எல்லாம்தார்ச்சாலைகளாகி கொதிக்கின்றன...தாலாட்டிச் சென்றமாட்டு வண்டிகள் மறைந்து,வகை வகையானஎந்திர வாகனங்கள் விரைகின்றன!சத்தான கம்பு, ராகி,சோள உணவுகள் மணந்த இடத்தில்'பிட்சாக்களும், பர்கர்களும்'பிரமாண்டம் காட்டுகின்றன!புடவையும், தாவணியும்சுடிதாரும், மிடியுமாய் உருமாறிடவேட்டிகள் படபடத்த இடத்தில்ஜீன்ஸ்கள் கவ்விப் பிடிக்கின்றன!ஒலியை மட்டும் கேட்டவானொலியின் இடத்தில்ஒளியையும் பார்க்கும்தொலைக்காட்சிகள் வீற்றிருக்க, தொலைபேசிகளின்கட்டுப்பாடுகள் ஏதுமின்றிகைக்குள் அடக்கமாய் அலைபேசி!மூன்று தினங்கள் எடுத்துக் கொண்டதகவல் பரிமாற்றம்மூன்று நிமிடங்களில் நடக்கிறதுஇணையதளம் வந்த பின்!அரிவாள் வீசி, வஞ்சம்தீர்த்த காலம் போய்ஆர்.டி.எக்ஸ் குண்டுகளால்ஆட்களை கொல்லுகின்றனர்!பலவும் இதுபோல்பரிணாம வளர்ச்சியால்மாற்றம் கண்டது போலத்தான்வீட்டுப் புறத்திண்ணையும்முதியோர் இல்லமாகி இருக்குமோ!- எஸ்.சங்கர்திருப்பரங்குன்றம்.