கவிதைச்சோலை!
குழந்தைகள் கிழிக்காத புத்தகங்கள்!* பச்சை மண்ணில்பாத்திரங்கள் செய்து,இச்சையோடு விளையாடும்கூட்டாஞ்சோறு!* கட்டங்களுக்குள்நொண்டியடித்து,களிப்போடு விளையாடும்சில்லு!* வண்ண வண்ண காகிதங்களால்அலங்காரம் செய்து,ஆசை மனங்களைப் போல் ஆகாயத்தில் பறக்கவிடும்பட்டம்!* எட்டுத் திக்கும்சிட்டாய் பறக்கும்கோட்டிப் புல்!* அறிவை விருத்தி செய்துஆனந்தத்தையளிக்கும்ஆடு புலி ஆட்டம்!* கண்ணுக்கும், கழுத்துக்கும்,கைகளுக்கும் உடற்பயிற்சியாய்அஞ்சாங்கல்!* இந்தக் குழியை அள்ளினால்இத்தனை காய்கள் கிடைக்குமென்று,வாழ்வின் திட்டமிடுதலைவலியுறுத்தும் பல்லாங்குழி!* வேர்வையை வெளியேற்றி,தசை நார்களை வலுப்படுத்தும்கோலாட்டம், கும்மி, சடுகுடு!* இந்த அற்புதபாரம்பரிய விளையாட்டுகளைமறந்து விட்டு,கிழித்துப் போட்ட புத்தகங்களாய்இன்றைய குழந்தைகள்!* மாற்றுவோம்...குழந்தைகளை மட்டுமல்லபாட திட்டங்களையும்!— தேன் தமிழன்,நெய்வேலி.