கவிதைச்சோலை!
முயற்சிப்போம்!விடா முயற்சிக்கும்,வீண் முயற்சிக்கும்ஓரெழுத்து தான் வித்தியாசம்முயற்சிக்க முயற்சிப்போம்!பலம் எது பலவீனம் எதுபுரிந்து கொள்ளஇரண்டாவதாகமுயற்சிக்க வேண்டும்!எதுவாக நினைக்கிறாயோஅதுவாக மாறுவாய்...அறிஞர்கள் சொன்னதுஅதற்காக,ஆண்கள் சூரியனாகவும்,பெண்கள் நிலவாகவும்ஆக முயற்சிக்கலாமா!'திரும்பி செல்வதை விடஇறப்பதே மேல்'என்றான் நெப்போலியன்...அதற்காக,கடற்கரைக்கு சென்ற நாம்சுனாமி வந்தால்திரும்பாமல் இருக்க முடியுமா!நிலவில் உழவு செய்யமுயற்சியுங்கள் தப்பில்லை...கிச்சுக்கிச்சு மூட்டிசிரிக்க வைக்க முயற்சிக்காதீர்கள்சாத்தியமில்லை!முயற்சிக்குமுற்றுப்புள்ளி இல்லை...முயற்சியுங்கள்முடியும் என்பதைமுழுமையாக உணர்ந்த பின்!— ரேவதி நீலமேகம், சேலம்.