கவிதைச்சோலை!
கவனமாய் இருப்போம்!வழிநெடுகிலும் வாகனங்கள் பயணங்களில் கவனமாய் இருப்போம்!வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றனபேசுவதில் கவனமாய் இருப்போம்!சிந்தனையே செயலை முடிவு செய்கிறது எண்ணங்களில் கவனமாய் இருப்போம்!எழுத்துகள் எப்போதும் ஆதாரம்கையெழுத்தில் கவனமாய் இருப்போம்!சாதிக்க குணங்களே சந்தர்ப்பம் தருகின்றனநடத்தையில் கவனமாய் இருப்போம்!வறுமையில் பணத்தின் அருமை தெரிகிறதுசேமிப்பில் கவனமாய் இருப்போம்!பிரிவில்தான் பாசத்தின் பெருமை தெரிகிறது நேசத்தில் கவனமாய் இருப்போம்!கல்விதான் அறிவை தீர்மானிக்கிறது படிப்பில் கவனமாய் இருப்போம்!முகம் தான் நினைப்பதை வெளியே காட்டுகிறது அக அழகினில் கவனமாய் இருப்போம்!பொய்தான் நம்பகத்தன்மையை அடையாளப்படுத்துகிறதுஉண்மையில் கவனமாய் இருப்போம்!வேலையின் விளைச்சலே பதவியை உயர்த்திடும் உழைப்பதில் கவனமாய் இருப்போம்!தயக்கத்தில்தான் வெற்றிகள் தள்ளிப்போகிறது தைரியத்தில் கவனமாய் இருப்போம்!வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது மகிழ்ச்சியில் கவனமாய் இருப்போம்!'எனது' என்பது நிரந்தரமற்றது ஈகையில் கவனமாயிருப்போம்!புகழ் ஒன்றே காலத்தால் அழியாதது சாதனையில் கவனமாயிருப்போம்!— என்.ஏகம்பவாணன், சென்னை.