உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காதல் யாசகமில்லை!உன்னை எனக்கும்என்னை உனக்கும்பிடித்திருக்கிறது!உன் பின்னால்அலைந்து திரிய,அவகாசமில்லை எனக்கு!உன்னைகெஞ்சிக் கூத்தாட,நான்பிச்சைக்காரனில்லை!ஒற்றை ரோஜாவைகாம்புடன் நீட்டுவதோ,ஆங்கில வார்த்தையைஇரவல் வாங்கி,'ஐ லவ் யூ' சொல்வதோகாதலின் வெளிப்பாடல்ல...அவை,ஆங்கிலேயனின் எச்சம்!உன்னிடம்பெண்மை இருக்கிறது;என்னிடம் ஆண்மை இருக்கிறதுஉன்னிடம்,இருபது ஆண்டுக்கானஅழகிருக்கிறது;என்னிடம்,அறுபது ஆண்டுக்கானஅன்பிருக்கிறது!ஜாதி, மதத்தை புதைத்துமனிதத்தை மட்டும் விதைத்துஒரே ஒரு புன்னகை சிந்தி,உன் உயிரில் என்னைபதியம் போடு...புதிதாய் ஒருபூகோளம் பூக்கட்டும்!— பெ.நீலமேகம்,மதுரவாயல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !