உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தேடல்!நம் மனக்குளத்தின்அறுபடாத வேர்களேதேடலின் முகவரி!தேடலின் பயணம்எங்கு அற்றுப் போகிறதோஅங்கு வாழ்வின் பயணம்முற்றுப் புள்ளியாய்தன்னை முடித்துக் கொள்கிறது!அறிவியலாய்ஆன்மிகமாய்அன்பின் ஊற்றாய்அறிவின் தாகமாய்தேடல்களின் கரங்கள்நீளுகின்றன!மானுடப் பரிணாமம்இயற்கையின் தேடலினால்இன்னுயிர் பெற்றுஇயங்கிக் கொண்டிருக்கிறது!மனித மனங்களும்புதுப்புது தேடலினால்தன்னைபுதுப்பித்துக் கொண்டேயிருக்கின்றன!தேடுதல் ஒன்றேமனித இதயங்களைதிறக்கும் மந்திரத் திறவுகோல்!தேடுதல் இல்லையெனில்...நிஜங்களின் தரிசனங்கள்நிராகரிக்கப்படும்!வாழ்க்கை வட்டத்தினுள்வலைபட்டுவறண்டு கிடப்போம்!புன்னகை சிந்தும்இதழ்கள் கூடபொலிவிழக்கும்!ஆதலினால்தேடுவோம்...அன்பைஅறிவைஅமைதியைத் தேடிநம் பாதங்கள் நகர்ந்துகொண்டேயிருக்கட்டும்!— பாரதி கிருஷ்ணன், சங்கராபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !