கவிதைச்சோலை!
இன்னமும் வாழ்கிறோம்!மற்றவர் குறை பேசியேமறந்து போகிறதுநம் குறைகள்!உயரத்தை எட்டியபின்உலகம் சுற்றுவதைமறந்து போகிறோம்!இருப்பதையெல்லாம்விழுங்கிவிட்டுவிக்கலுக்கு எச்சில் கூடஇரவல் வாங்குகிறோம்!கிட்டியதையெல்லாம்கட்டியணைத்துகிணற்றுத் தவளையாகவேவாழ்கிறோம்!தொல்லைகள் என்றுதூரத்தில் நிறுத்திதொலைத்து விடுகிறோம்உறவுகளை!நிச்சயமற்ற வாழ்வைநியாயப்படுத்தியேகலைத்து விடுகிறோம்நம் கனவுகளை!பகல் பொழுதுகளில்கண்களை மூடிக் கொண்டேபயணத்தை முடிக்கிறோம்!பார்வை நம்மீதில்லை என்றுபாவக் கணக்குகளின் பட்டியலைநீட்டிக் கொண்டே போகிறோம்!உயிர்க்கொல்லியென்றுதெரிந்தும்உயிரோடு விளையாடுகிறோம்!ஊட்டச்சத்து என்ற பெயரில்ஊரும், பேரும் இல்லாத உரமேற்றிஅடுத்த தலைமுறைகளை அழிக்கும்ஆயுதம் ஏந்தாதஅமைதி கொலையாளிகளைஉருவாக்கி வருகிறோம்!இருப்பதில் கொஞ்சம்இரக்க மனமின்றிஇரும்பு இதயத்தோடேஇயங்குகிறோம்!எட்டும் இலக்குஅருகில் இருந்தும்எத்திசையென்று தெரியாமல்இருதலைக்கொள்ளியாய்இன்னமும் வாழ்கிறோம்!— க.அழகர்சாமி,கொச்சி.