உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இயற்கை இல்லையேல்!* புரிதல் இல்லையேல்புரட்சிகள் கூடபொய்த்து விடும்!* இலக்கியங்கள் இல்லையேல்இலக்கணம் கூடபுறக்கணிக்கப்பட்டு விடும்!* அரவணைப்பு இல்லையேல்தாயன்பு கூடஅருகதையற்றதாகி விடும்!* ஊடல்கள் இல்லையேல்காதல் கூடகசந்து விடும்!* இயற்கை இல்லையேல்இமயம் கூடசரிந்து விடும்!* மனிதம் இல்லையேல்மாந்தர் கூடமாக்களாகி விடுவர்!* உழைப்பு இல்லையேல்உளிகள் கூடஉருவிழந்து விடும்!* முகங்களை தொலைத்தபின்முகவரிகளைத் தேடிநாம் சாதிக்கப் போவதென்ன?* எதை நோக்கி ஓடினும்,முதலில், இயற்கையை காத்திடுஇறுதிவரை, மனிதத்தை போற்றிடு!— ஆர்.மீனா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !