உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

முரண்!கொடிய விஷம் கொண்டபாம்பை நல்ல பாம்புஎன்பர்!பட்டப்படிப்பிற்கு பல லட்சம்வாங்கினால் கல்வித் தந்தைஎன்பர்!உடம்பு நோகாத கதாநாயகனுக்காகஉடலை வருத்தி, 'ஸ்டன்ட்' அடித்தால்டூப்பு என்பர்!கட்சி கொடுக்கும் லட்சத்திற்காகதீக்குளித்தால்தியாகி என்பர்!கடவுளைக் கண்டேன் எனசாதுவேடம் பூண்டால்மகான் என்பர்!அரை வயிறு கஞ்சி குடிக்கும்விவசாயியை பார்த்துகுடிமக்கள் என்பர்!இப்படிப் பல முரண்களைபட்டியலிட்டு எழுதினால்கவிதைக்கு, பொய்யழகு என்பர்!சொல்கேளான் ஏ.வி.கிரி.சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !