உள்ளூர் செய்திகள்

பி.சுசீலா பாட்டு கேட்டால் நோய் பறந்தோடும்!

மெஹரூப்ராஜ் என்ற மருத்துவர், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், 'பி.சுசீலா பாடல்களை கேட்கவும்...' என்று எழுதித் தருகிறார். சுசீலாவின் இனிய குரல், நோய் தீர்க்கும் மருந்தாகும் என்பது இவரது நம்பிக்கை. இவரது தந்தையும் சுசீலா பாடல்களுக்கு அடிமை.கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது, வயனாடு மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். 'கடுமையான நோய்களால் அவதிப்படும் நோயாளிகள் சுசீலா பாடல்களைக் கேட்டால் நிச்சயம் ஆறுதல் கிடைக்கும். இசை வைத்தியத்தை, கேரள மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்...' என்று கூறுபவர், 'இத்திட்டத்தை அமலாக்க, என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வேன்...' என்கிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !