கவிதைச்சோலை!
அமைதி ஆயுதம் போதும்!உலகம் போற்றும்உத்தமனேஉன்னால்தானேஉரிமை பெற்றோம்!நாங்கள்உயரப் பறக்கசிறகுகள் தந்துஉன் உயிர் சிறகைஉதிர்த்துக் கொண்டாயே!அன்னையின்அடிமைச்சங்கிலி உடைக்கஅர்ஜுனனைப் போலஅஸ்திரம் ஏந்தவில்லை!சச்சரவுகள் தீர்க்கவாசுதேவனைப் போலசாவகாசமாக வந்துசர்க்கரை பேச்சு பேசிசமரச முயற்சியும்மேற்கொள்ளவில்லை!ஆயுதம் எடுக்கவில்லைஅறைகூவல் விடுக்கவில்லைஅடிமைச்சங்கிலியைஎப்படி அடக்கம் செய்தாய்?அமைதிப்பிரியனே...உன் மவுன யுத்தத்தின்உச்சி தவத்தால் தான்எத்தனை மகத்துவம்!மறந்து போன மனித நேயம்உன் ஜனன தேதியில் மட்டும்மறுமுளை விட்டு மறுபடியும்மறைந்து கொள்கிறது!ஆனாலும்மகாத்மா என்ற சகாப்தத்தின்தலைமகன் நாமம் மட்டும்மறந்து போவதே இல்லைகருவறையிலிருந்து கல்லறைசெல்லும் வரை!நீ அழைத்துச் செல்ல மறந்தஅகிம்சையென்னும்அமைதி ஆயுதம் ஒன்று போதும்இந்த உலகம் உயர்ந்து நிற்கும்உன் பேர் என்றும் நிலைத்து நிற்கும்!— க.அழகர்சாமி, கொச்சி.