உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நினைவு!பண்டிகை நாட்களில்யாரோ வந்துஉணவு தருகின்றனர்!தலை வாழை இலையில்வித விதமானஉணவு வகைகள்!லட்டைப் பார்த்ததும்பெரிய மகனுக்குபிடிக்குமே என்கிறது மனது!மெல்லிய சப்பாத்தியை கண்டுமகளுக்கு பிடிக்குமேஎன்ற நினைவு வருகிறது!நெய் ஊற்றிய பருப்பு சாதம்இளைய மகன் நன்றாகசாப்பிடுவான் என்று ஞாபகம்!அப்பளம் இளைய மகளுக்குரொம்ப பிடிக்கும் என்பதைமறக்க முடியவில்லை!பால் பாயசம்...மறைந்த கணவருக்குமிகவும் பிடிக்குமேஎன்கிறது உள்ளுணர்வு!இப்படியே எல்லாவற்றையும்பார்த்து பார்த்துஎதையும் சாப்பிடப் பிடிக்காமல்நினைவலைகளில்நீந்திக் கொண்டிருக்கிறாள்முதியோர் இல்லத்தில் ஒரு தாய்!— 'சொல் கேளான்' ஏ.வி. கிரி,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !