கவிதைச்சோலை!
மீண்டு வர வேண்டும்விதைக்குள்பொதிந்து இருப்பினும்மண்ணில் புதைந்துஎழும்ப வேண்டும்விருட்சமாக வளர்வதற்கு!கடலுக்குள்கலந்து இருப்பினும்ஆவியாக மேலேறிகீழிறங்க வேண்டும்மழைநீராய் பொழிவதற்கு!தங்கத்திற்குள்விரவி இருப்பினும்நெருப்பில் உருகிஉறைய வேண்டும்ஆபரணமாய் ஜொலிப்பதற்கு!மூங்கிலுக்குள்ஒளிந்து இருப்பினும்தீக்காயமுற்று வர வேண்டும்புல்லாங்குழலாய் இசைப்பதற்கு!கரும்புக்குள்கரைந்து இருப்பினும்ஆலையில் நசுங்கிபிழைத்து வர வேண்டும்கற்கண்டாய் இனிப்பதற்கு!களிமண்ணுக்குள்கூடி இருப்பினும்குழைத்துப் பிசைந்தும்குதூகலித்து வர வேண்டும்பாண்டங்களாய் மாறுவதற்கு!துணிக்குள்பரவி இருப்பினும்ஊசிமுனையால்துளைபட்டு வர வேண்டும்ஆடையாய் ஆவதற்கு!கல்லுக்குள்கைகோர்த்து இருப்பினும்உளியால் சிதலப்பட்டுசிரித்து வர வேண்டும்சிற்பங்களாய் சிறப்பதற்கு!வெற்றிகள் எதுவும்வெறுமனேகிடைத்து விடுவதில்லைஎனும்போது...சங்கடம் தரும்சவால்களை சமாளித்துமீண்டு வரத்தானே வேண்டும்மாமனிதனாய் மாறுவதற்கு!— கீர்த்தி, கொளத்தூர்.