உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பிழைப்பு!* அரைநாள் புளியமரத்தடியில்அமர்ந்து, ஊதியம் பெறநூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டம்!* மழை வெள்ளத்தால்பாதிக்கப்படாதபண்ணையாருக்கும்பயிர் கடன் தள்ளுபடி!* அரசு வங்கியில்கல்விக் கடன் பெற்றுபட்டம் வாங்கிநல்ல வேலை கிடைத்துகை நிறைய சம்பாதிக்கும் போதும்கடன் தள்ளுபடியைஎதிர்பார்க்கும் மாணவர்கள்!* அடுக்குமாடி கட்டிக் கொடுத்தும்அதை வாடகைக்கு விட்டு விட்டுசாலையில் குடியிருக்கும்ஏழை எளியவர்கள்!* கொஞ்ச நஞ்ச வருமானத்தையும்பறித்துக் கொண்டுகொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும்மதுக்கடைகள்!* இலவச அரிசிமலிவு விலை உணவு, குடிநீர்வேட்டி, சேலைமிக்சி, 'டிவி' கிரைண்டர்...* இலவச வீடுகள்ஆடு, மாடுகள்மின்விசிறி, மின்சாரம்பேருந்து பயணம், மடிக்கணினி...* இத்தனையைக் கொடுத்தும்இந்நாட்டில் இன்னும்தடுக்க முடியவில்லைதிருட்டு, கொள்ளை, வழிப்பறிகுற்றச் செயல்களை!* மக்களை உழைக்கச் சொல்லிபிழைக்கச் சொல்லும்நல்ல தலைவர்கள்இல்லாத குறையால் தானோ!— 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !