கவிதைச்சோலை
நிலையாமை!சொந்த, பந்தங்கள் யாவும்அந்தந்த நேரத்து அடையாளங்கள்உடன் வருவோரெல்லாம்ஊர் வரைக்கும் வருவதில்லை!வளர்பிறைக்கொரு காலம்தேய்பிறைக்கொரு காலம்உயர்வு தாழ்வென்பதுபகலிரவு போலாகும்!அரண்மனைகள், அந்தப்புரங்கள்கோட்டைக் கொத்தளங்கள்காலம் தின்று தீர்த்தது போகமிஞ்சியவை சுற்றுலாத் தலங்கள்!இறவாப் புகழ் பெற்றுஇன்னமும் வாழ்பவர்கள்புகழ் போதைச் சேற்றில்புதையுண்டு போனவர்கள்!தரை தட்டும் கப்பல்கள்கரைசேரும் கட்டுமரங்கள்யானைக்கும் அடி சறுக்கும்எறும்பு ஊர கல்லும் தேயும்!எட்டுத் தலைமுறைக்குகட்டிக் காத்த செல்வங்கள்சல்லடையில் தேக்கிய நீர் போல்சடுதியில் மறைகிற வேகம்!மாற்றங்கள் நிகழ்வதில்மாற்றமேதுமில்லைநிலையானது எதுவெனில்நிலையாமையே என்றறிக!— அ.கங்காதரன், புதுச்சேரி.