உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பூப்பூக்கும் புத்தாண்டு! நாட்காட்டிகளில் கிழிக்கப்படும்தாள்கள்ஒவ்வொருவருடையவாழ்நாளின்ஒவ்வொரு நாளையும்கழித்துக் கொண்டிருக்கின்றன!பூமியின் வசந்தத்தில்தம் ஆயுளை கழித்தநம் மூதாதையர்நீரும், நெருப்புமாய்நிலமும், காற்றுமாய்அகண்ட வானமுமாய்ஐம்பூதங்களில் கரைந்திருக்கின்றனர்!ஐம்பூதங்களுக்குள்ஐக்கியமாவதல்ல நம் வாழ்வு!நம் சந்ததியினருக்குகல்வெட்டுகளாய்கலங்கரை விளக்கங்களாய்வாழ வழிகாட்டுவது தான்ஒவ்வொரு ஆன்மாவின்அர்த்தமுள்ள அடையாளம்!விஷமாகிப் போனவற்றைவிரட்டியடித்துபூமியின்புனிதமான பொக்கிஷங்களாம்இயற்கை வளங்களைநேசப்படுத்தும்நிஜமான பாதுகாப்பேபூமியின் ஆயுளுக்கானநிரந்தர உத்தரவாதம்!சுயநல வெறியால்புரையோடிப் போயிருக்கும்பூமியின் வேர்களுக்குபுது ரத்தம் பாய்ச்சிடும்புனிதப் பணி தொடரட்டும்!நாட்களாய்வாழ்க்கை நகர்ந்தாலும்பூமியை புனிதப்படுத்தும்ஒவ்வொரு புத்தாண்டும்புனித ஆண்டு தான்!இதில் பயணிக்கும்ஒவ்வொரு மனிதர்களும்புனிதர்கள் தான்!— எஸ்.பி.செல்வராஜ், அல்லிநகரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !