உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சிலருக்கு மட்டும் தான்சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...வாழும் முறையும்வளரும் வித்தையும்!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...வீழ்ச்சியிலிருந்துவெற்றிக்கு வர!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...இருட்டிலிருந்துவெளிச்சத்திற்கு வர!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...பாசத்தையும்,நேசத்தையும்நெஞ்சில் வைக்க!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...ஒடிந்த மனதிற்குஒத்தடம் கொடுக்க!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...துக்கத்தையும், துயரத்தையும்குழித்தோண்டி புதைக்க!சிலருக்கு மட்டும் தான்தெரிகிறது...முகாரி ராகத்தைதோடி ராகமாக மாற்ற!முயற்சியென்பது ஊன்றுகோல்பயிற்சியென்பது திறவுகோல்இதுதான்இவர்கள்வாழ்க்கையின் சூத்திரம்!— அ. முருகானந்தம், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !