உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

உலகம் பார்க்க பிறந்தவன் நீ!குப்பையில் முளைத்தெழும்குன்றிமணியாய் இரு...தகரத்தை அல்லதங்கத்தை எடை போடபிறந்தவன் நீ!குடத்தினுள் முடங்கிக் கிடக்காமல்குன்றின் விளக்காய் இரு...உன்னடி இருட்டெனும் போதும்உலகுக்கேஒளி தர பிறந்தவன் நீ!ஓய்வின்றி ஓடிமுடிவில்கடலில் கலக்கும்ஆறாய் இரு...செல்லும் வழியெல்லாம்வளமாக்கப் பிறந்தவன் நீ!காற்றினிலே கரைந்து போகும்கற்பூரமாய் இரு...ஆலய வழிபாட்டின் அம்சம் நீ!எச்சமாய் விழுந்தாலும்பூமியை துளைத்தெழும்விதையாய் விழு...எதிர்கால விருட்சம் நீ!ஒருநாள் பொழுதில்வாழ்ந்து, சருகாகிவாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும்மலராய் இரு...வாழும் போதேமலர்ந்து மணம் வீசிஉயிர் காக்கும் மருந்தாய் நீ!ஊடும், பாவுமாய்அடி வாங்கி - பின்எத்தனையோ முறைஅடித்து, துவைத்து, பிழிந்தாலும்நைந்து போகும் வரை உழைக்கும்துணியாய் இரு...மானம் காக்க பிறந்தவன் நீ!காற்றுள்ள போதே தூற்றிக் கொள்என்பதற்கேற்ப இப்போதேகண் தானம், உயிர் தானம் செய்திடுகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ...உலகம் பார்க்கப் பிறந்தவன் நீ!— எஸ்.செல்வம், அருப்புக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !