உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

சூத்திரதாரி!வாழ்க்கை போரில் தோற்று,'ஏன் படைத்தாய்' எனஇறைவனை நிந்திக்கும்போதெல்லாம்கண் எதிரே வருகின்றனர்கை, கால் இழந்தஊனமுற்றோர்...ஊன்றுகோலே துணையாகஉலகை நடை போடும்பார்வையற்றவர்...சிக்னலில் இளைப்பாரும்வாகனங்களுக்கு இடையேஇரக்கும் கரங்களுக்குசொந்தக்காரர்கள்...அடுத்த நொடிகடவுளுக்கு நன்றிசொல்கிறது மனம்!தோல்விகளால் துவண்டுஉள்ளம் சோர்வுறும் போதெல்லாம்கண் எதிரே கடந்து செல்கின்றனர்உச்சி வெயிலில்பார வண்டி இழுக்கும் தொழிலாளி...பத்து ரூபாய்க்கு ரெண்டுசாலையோரம் கூவிவிற்கும் சிறுவன்...தள்ளாத வயதில்தளர் நடையில்கீரை விற்கும் கிழவி...தன்னம்பிக்கை கொள்கிறது மனம்!வாழ்க்கையை, வாழ்க்கையாலேபகுத்து, தெளிவுற வைக்கும்கடவுள் தான்எத்தனை பெரிய சூத்திரதாரி!— ப.லட்சுமி,கோட்டூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !