உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மனிதநேயம் என்ன செய்கிறதுமனிதநேயமேநம் செயல்பாடுகளைநல் வழிப்படுத்துகிறது!மனிதநேயமேநம் துன்பங்களைமறக்கச் செய்கிறது!மனிதநேயமேநம் போராட்டங்களைநிறுத்தி வைக்கிறது!மனிதநேயமேநம் தவறுகளைமன்னிக்கச் செய்கிறது!மனிதநேயமேநம் கனவுகளைநனவாக்கச் செய்கிறது!மனிதநேயமேநம் எண்ணங்களைமேன்மைப்படுத்துகிறது!மனிதநேயமேநம் வன்முறைகளுக்குசமாதி கட்டுகிறது!மனிதநேயமேபிரிந்த உள்ளங்களைஒன்று சேர்க்கிறது!மனிதநேயமேமனித வாதங்களுக்குமங்களம் பாடுகிறது!மனிதநேயமேவாடிய பயிரை கண்டுவாடும்படி செய்கிறது!மனிதநேயமேஇன்னா செய்தாருக்கும்இனியவை செய்கிறது!மனிதநேயமேஇறுதிப் பயணத்தைபுனிதப் பயணமாக்கிறது!— பூ.சுப்ரமணியன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !