உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அழகும், ஆபத்தும்!அழகிய எதையும்ஆபத்து சூழ்கிறது!ஒளி தரும் பொருளைத் தான்இருளுக்குள்வைக்கின்றனர்!கிடைத்தவன்போற்றுகிறான்கிடைக்காதவன்தூற்றுகிறான்!அழகுக்குஎப்போதும் அப்படி ஒருதண்டனை!அமைதியாகஇருப்பினும்அழகைச் சுற்றிஏக்கப் பெருமூச்சாய்எப்போதும் புயல் வீசுகிறது!ஆர்ப்பரிக்கும்அழகிலோஅழிவை உண்டாக்கும்பொறாமை தீ பொங்கி எரிகிறது!வெளிச்சம்தருகிற அழகு வெப்பத்தையும்உண்டாக்குகிறது!கவர்ந்து இழுக்கும் அழகுவாழ்வைகவிழ்த்து விடுகிறது!வணங்கவைக்கும்கண்ணியமேநல் அழகு...காலில் விழவைக்கும்கவர்ச்சிகளோமன அழுக்கு!நத்தையின்கூடு போலஅழகை மறைத்துஅன்பை வெளிப்படுத்துவதுநாகரிகம்!இல்லாத அழகைஇருப்பதாய் காட்டிமாயம் செய்வதுஅநாகரிகம்!அமைதி தருகிறஅழகு இருந்தால்அது ஆனந்தம்ஆசையை உண்டாக்கும்அழகு இருந்தால்அது பலவீனம்!ஒப்பனை அழகுகற்பனை அழகுவிற்பனை அழகையெல்லாம்விட்டு விட்டு கனிவான, கம்பீரவீரமான அழகையேவேண்டுவோம்!ஆர்.வடுகம் சிவகுமார், ஈரோடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !