உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஊர் நினைப்பு!நான் இல்லாமலேயேஎங்கோ வெகு தூரத்தில்இருந்து கொண்டு தான் இருக்கிறதுஎன் ஊர்!என் கால் தடம் படாதஅந்தக் காட்டாறும்மழை வந்தால் நீர் தருவதும்வராத காலங்களில்மணல் சுடுவதுமாகத்தான் இருக்கக் கூடும்!என் குரலுக்கு மயங்கிய அந்த மலைக் குகைகள்எப்போதும் போல்யாரோ ஒருவரின் குரலைஎதிரொலித்துக் கொண்டு தான் இருக்கும்!முள்ளில் பெயரெழுதி மகிழ்ந்த அந்தக் கள்ளிச் செடிவேர் பரப்பி பூத்திருக்கவே செய்யும்!நான் தண்ணீர் ஊற்றி வளர்த்ததென்னை மரங்களும்ஒற்றைப் பலா மரமும்கனிகளையும் காய்களையும்கொடுத்தபடிதான் நின்றிருக்கும்!ஊர் விட்டு, வீட்டை விட்டுஎன்னைப் போல்நகரம் பெயர்ந்த யாரையும்இங்கே கோபுரம் கட்டி வாழ்ந்தாலும்வாட்டிக் கொண்டு தான் இருக்கும்எப்போதும் ஊர் நினைப்பு!இ.எஸ்.லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !