உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

விட்டில் பூச்சி மனிதர்கள்!கூனி வளைந்த உடம்புசுருங்கிய வதனம்தளர்ந்த நடைபுரியாத பேச்சுநினைத்துப் பார்க்கிறேன்...இளமையில் எத்தனைகர்வம் கொண்டாயோஉன் அழகை நினைத்து!சிதிலமடைந்த கோவில்புதர் மண்டிய வளாகம்பூஜைகளற்ற மூலவர்நினைத்துப் பார்க்கிறேன்...எத்தனை மனிதர்களின்ஆசை, அபிலாஷைகோரிக்கைகளைதாங்கிக் கொண்டிருந்ததோ!கவலை தோய்ந்த முகம்கள்ளம் நிறை மனம்பணம், பதவி, மயக்கம்நினைத்துப் பார்க்கிறேன்...கள்ளமற்ற பிஞ்சுவயது தோற்றத்தை!நினைத்துப் பார்க்கிறேன்...சென்றது திரும்புவதும்திரும்பியது செல்வதுமானஉயிர் சுழற்சியில்அவ்வப்போது வந்து செல்லும்விட்டில் பூச்சி மனிதர்களும்அவர்களின் குணங்களும்மாறாமல் தொடரும் அதிசயத்தை!ப.அங்கயற்கண்ணி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !