உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நம்பிக்கையே உனக்கு நன்றி!என்னை பகைத்தவர்களேஉங்களுக்கு நன்றி...நான் வீழ்ந்தபோதெல்லாம் என்னைஎழ வைத்தவர்கள்நீங்கள் அல்லவா!எதிரிகளே உங்களுக்குஎன் நன்றி...இடையூறுகளால் என்னைஉதை பந்தை போல்உதைத்து உதைத்துஉயர வைத்தீர்கள்!என் மீது ஏவப்பட்டஅவமானங்களுக்கு நன்றி...இன்றைய என்வெகுமானங்களுக்கெல்லாம்அடித்தளமிட்டது அதுதானே!துப்பாக்கி தோட்டாக்களாய்என்னைத் துளைத்தெடுத்ததோல்விகளுக்கு நன்றி...என் வெற்றிப் படிகளின்முதற் படிகளல்லவா அவைகள்!என்னை சோதித்தசோதனைகளுக்கு நன்றி...சோதனைகள் தானேசாதனைகளின் வழித்தடம்!எதிர்ப்புகளுக்கும்இழப்புகளுக்கும் நன்றி...என்னுள் இருந்த என்மன வலிமையை எனக்குஉணர்த்தியமைக்கு!என் தன்னம்பிக்கையேஉமக்கு ஓராயிரம் நன்றிகள்...நீ இல்லையேல்நானும் இல்லை - என்வெற்றிகளும் இல்லை!செந்தலை நெப்போலியன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !