கவிதைச்சோலை!
கவலைகள் நிலையானதல்ல!கன்னத்தில் கை வைத்துகவிழ்ந்து கிடப்பதால்கவலைகள் என்றும்கல்லறை ஏறுவதில்லை!கவலையைப் போக்ககண்ணீர் வடிப்பதுமகிழ்ச்சிக்கானமார்க்கம் அல்ல!கவலைகள்காயத்துக்கு மருந்தல்லஅவைகள் விருத்தி செய்யும்விஷக்கிருமிகள்!கவலைகள்சுதந்திர காற்றைசுவாசிக்க விடாமல்இதயத்தை இறுக்கும்சுருக்கு கயிறுகள்!உள்ளத்தை உல்லாசமாகஉலவ விடாமல்உடைத்தெடுக்கும் உளிகள்!கவலைகள்சரித்திரமல்லஎன்றும் நிலைத்து நிற்பதற்கு!அவைகள்நம் சாதனைகளுக்குசோதனைகளாக, சுமையாகிசுகம் கலைக்கும்சூத்திரதாரிகள்!மரணம் நிச்சயிக்கப் பெற்றஅந்நிகழ்வுகளுக்குமனதில் நினைவலைகள் எழுப்பிநிம்மதி கரைகளை உடைப்பானேன்!உலர்ந்து போன நேற்றையஉணர்வுகளை உதிர்த்துமலரப்போகும் நாளையநற்சிந்தனைகளுக்குநாற்றங்காலிட்டுகளைகளாக கவலைகளைபறித்தோமானால்ஆனந்த மகிழ்ச்சி அறுவடையில்ஆகாயத்தில் பறக்கலாம்!க.அழகர்சாமி, கொச்சி.