கவிதைச்சோலை!
சிந்தனை செய் மனிதா!வாழ்க்கைஒரு வெள்ளைச் சுவர் - அதில்வண்ண ஓவியங்களைவரைய வேண்டியதுநாம் தான்!வாழ்க்கைஒரு வளம் நிறை நிலம் - அதில்உழுது விதைத்து நீர் பாய்ச்சிபயிர் வளர்க்க வேண்டியதுநாம் தான்!வாழ்க்கைஒரு விளக்கில்லாத வீடு - அதில்தீபங்களை ஏற்றிஒளியை பெற வேண்டியதுநாம் தான்!வாழ்க்கைஒருநாள் முற்றுப்புள்ளி காணும்...அதற்குள் அதைவளமாக்க வேண்டியதும்ருசிக்க வேண்டியதும்ரசிக்க வேண்டியதும்நாம் தான்!நாம் விலங்குகளோ பறவைகளோபூச்சிகளோ அல்ல...மனிதர்கள்!வெற்றிகளையும்சாதனைகளையும்படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்...படைக்க வேண்டியவர்கள்!ஏற்றிச் செல்லும் வண்டிகள்இயந்திரமாக இருக்கலாம்பயணம் செய்யும் மனிதர்கள்இயந்திர வாழ்க்கையாவாழ்வது?உண்டு உறங்கிமடிவதற்காகஉண்டானதல்லஇந்த வாழ்க்கை - அதைஉணர்ந்து கொள்உயர்ந்து நில்!சிந்தனை செய் மனிதா...நீசெயற்கரியசெய்யப் பிறந்தவன்.செய்... ஜெகம் புகழ வாழ்!- தங்கவேலு மாரிமுத்து, திண்டுக்கல்.