கவிதைச்சோலை!
அவர்கள்!எழுதுகோலும்எழுத்தும் மட்டுமல்லஎழுத்தறிவிப்பதால்இறைவன் ஆகின்றனர்அவர்கள்!ஆறாம் அறிவைஇயக்கும் சக்திஅவர்கள் கைகொள்ளும்அறிவின் யுக்தி!பச்சை களிமண்ணாகபள்ளிக்குள் நுழைபவர்களைஉச்சம் தொடும் வண்ணம்உயர்த்துவது, அவர்கள்!வகுப்பறை என்றுவர்ணிக்கப்படுவதைபேதங்கள் பாராதகருவறையாக்கும் கடவுளர்அவர்கள்!எழுதுகோல் பிடிக்கவும் எழுத்தை வடிக்கவும்அவர்கள் கற்றுத்தருவதுகைகளுக்குதான் என்றாலும்நிமிர்ந்து நிற்பனவோதலையும், கால்களுமே!தன்னம்பிக்கையால் உரமும்நல் நம்பிக்கையால் தரமும்தருவதில் தயாசீலர்கள்!வாக்கு கற்றதால் வாத்தியார்கள் மட்டுமல்லமாணவர்களின் மனப்போக்கும் கற்றதால்மகா புருஷர்களாய் மதிக்கப்படுபவர்கள்!கற்ற கல்வியால் உற்ற வேலை பெற்றுகை நிறைய கரன்சி பெறுகையில்ஒவ்வொருவராலும்பெற்ற தாயினும்பெரிதும் நினைக்கப்பட வேண்டியவர்கள்!ஏனெனில் -அவர்கள்நம் அறிவுக் கண் திறந்து வைத்துஅக இருள் நீக்கியதால் தான்அவனியில் பெருமையாய் உலா வருகிறோம்!தலை நிமிர்ந்து நிற்கதிருவருள் புரிந்த குருமார்களைமண்ணில் உள்ள காலம் வரைமனதில் வைத்து துதிப்போம்!— ஆர்.ஸ்வாதி, கரூர்.