உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

கவலை...மனிதர்களே... மனிதர்களே...கவலைகளை வளர்த்துமாய்ந்து போகும் மனிதர்களே...முதன் முதலில்கட்டு மரம் கட்டிகடலில் போன மனிதனைநினைத்துப் பாருங்கள்...ஆழ்கடலில்முத்துக் குளிக்க இறங்கியமனிதனை கொஞ்சம்நினைத்துப் பாருங்கள்...ஆகாயத்தில் பறந்தமுதல் மனிதன் நிலையைகற்பனை செய்துபாருங்கள்...நிலவில் முதல் காலடிவைத்த மனிதனின்துணிவை நினைத்துப் பாருங்கள்...பல்லாயிரம் அடிகள்சுரங்கத்தில் இறங்கிதங்கம் எடுக்கும் மனிதனைநினைத்துப் பாருங்கள்...நினைத்து பார்ப்பதும்கற்பனை செய்து பார்ப்பதும்ஒப்பிட்டு பார்ப்பதும்தவறில்லை...அப்போதுதான் புரியும்நம் கவலைகள் சிறிது...நாம் வாழ்வதுசொர்க்கத்தில் என்பது!சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !