கவிதைச்சோலை!
அது, அந்த காலம்!நேர்மை, நியாயம்ஈவு, இரக்கம்என்பது இங்கேபோயாச்சு...நியாயமற்றசெயல்கள் செய்வதுநித்திய கர்மம்என்றாச்சு!பெண்ணை கடவுள்என்று போற்றியதுகடந்த காலம்என்றாச்சு...கடத்திச்சென்றுகற்பழிக்கிற நாடாய்இந்த நாடாச்சு!தேவைக்காகபணத்தை தேடிஅலைந்து திரிந்ததுஅந்த காலம்...பணத்துக்காகபடுகொலை செய்துபகட்டாய் திரிவதுஇந்த காலம்!வெள்ளை சட்டை,வேட்டி அணிந்தால்உள்ளம் உயர்ந்ததுஅந்த காலம்...கொள்ளையடித்துகும்பல் பிடித்துகுலவச் செய்வதுஇந்த காலம்!கட்டுக்கோப்பாய்கற்ற வழியில்பிழைப்பு செய்ததுஅந்த காலம்...பொட்டு நகைக்காய்போட்டுத் தள்ளிபூரிக்கிறதே இந்த காலம்!அண்ணல் காந்தி,நேரு என்றால்,கண்கள் கசிந்ததுஅந்த காலம்...அடிக்கிற கொள்ளையைபார்த்து அந்த சிலைகள்சிரிக்குது இந்த காலம்!இந்நாட்டுபெருமையென்று இதைஅந்நியர் அறியவாய்ப்பில்லை...சொந்த நாட்டான்இப்படி நடப்பதுகொஞ்சம் கூடசரியில்லை!- ஆர்.அம்பிகா, நெல்லை.