கவிதைச்சோலை!
அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்!அன்பாய் ஓரிரு வார்த்தைஅழகாய்சிறு சிறு புன்னகைமெலிதாய் தினம்கட்டி அணைத்தால்எளிதாய் ஏக்கம் தீரும்!பாராமுகமாய் இருந்தால்பாரம் ஏறிவிடும்எதையும் கேளாது இருந்தால்என்றும் கேட்காமல் செய்து விடும்!குட்டி கதைகளைகுதுாகலமாய் சொல்லிக் கொடுகுறும்பு கேள்விகளை சுதந்திரமாய் சொல்ல விடு!நிலவு ஒளியில்நட்சத்திரம் தேடச் சொல்சூரிய ஒளியில்வியர்வை வர ஓடச் சொல்!சாலை ஓரங்களில்நடக்க கற்றுக்கொடுஉன்னிலும் ஏழையின்நிலையை உணர்த்திடு!மானம் பெரிதெனவாழ்ந்திட உணர்த்திடுஅவமானம் தாங்கிடமனதை பழக்கிடு!நல்லது கெட்டதுஅறிந்திட உணர்த்திடுநல்லதை மட்டுமேசெய்திட வைத்திடு!அன்புக்கு ஏங்கும்குழந்தையிடம்ஆத்திரம் கொள்ளாதே...மழலை உள்ளத்தின்கடவுள் தன்மையைகடிந்து கொள்ளாதே!பூமியில் பிறந்தஅனைவருக்கும்ஏதேனும் இடமிருக்கும்...சாதிக்க துடிக்கும்எல்லாருக்கும்வாய்ப்புகள் காத்திருக்கும்!அறிவு கட்டடத்தில்அன்பு அடித்தளம்அழகாய் அமையட்டும்வெற்றி கொடிகளின்வேர்கள் எல்லாம்பாசத்தில் பதியட்டும்!- டாக்டர் வடுகம் சிவகுமார்,சென்னை.