உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தண்டனை!துாக்கு தண்டனை எனசட்டம் இயற்றினாலும்தடுக்க முடியவில்லைபாலியல் குற்றங்களை!மாற்றுத் திறனாளிசிறுமியை கூட விடாமல்சிதைக்கின்றனர்காமுகர்கள்!போதை கணவன் தொல்லைதாங்காமல், தலையில்கல்லை போட்டு கொல்கிறாள்ஒரு மனைவி!ஆசிரியர் - மாணவிமாணவி - ஆசிரியர் உறவுபுனிதம் இழந்துகளங்கப்படுகிறது!தயாரிப்பாளர் முதல்இயக்குனர் வரைவலை வீசிய கொடுமையைபகிர்கிறார் ஒரு நடிகை!பெண்களை களங்கப்படுத்தும்காமுகர்களை சட்டம்கடுமையாக தண்டிக்க வேண்டும்என்பதில் மாற்றுக் கருத்தில்லை!என்றாலும்...மது கடைகளை திறந்தவர்களையும்ஆபாச இணைய தளங்களைஅனுமதிப்பவர்களையும்...எதுவும் தவறில்லை என்று'டயலாக்' பேசி, அரை குறைஆடைகளுடன் ஆட்டம் காட்டும்ஊடகங்களையும்...சட்டத்தின் பிடியிலிருந்துதப்பி விடும் திமிங்கிலங்களையும்யார், எப்படி, எப்போது, எவ்வாறுதண்டிப்பது?ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !