உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நாங்கள் தமிழர்கள்!மழையோ, வெயிலோ'தலைவர் வாழ்க' என கோஷமிட்டுமணிக்கணக்கில் சாலையில் நிற்போம்!கோஷமிட்டு வந்த காசை'டாஸ்மாக்'கில் அரசுக்கேஅர்ப்பணிப்போம்!வானுயர, 'கட் - அவுட்'செய்து வாங்கி வந்துபாலாபிஷேகம் செய்வோம்!எவனோ கிரிக்கெட் விளையாடபொன்னான பொழுதையெல்லாம்விசிலடித்தே கழித்திடுவோம்!அபிமான நடிகனுக்குஉடல்நலம் சரியில்லை எனில்அலகு குத்தி, தீ மிதித்துவேண்டுதலை நிறைவேற்றுவோம்!கட்டடத்து வேலையெல்லாம்கஷ்டமென்று ஒதுக்கி விட்டோம்உணவகத்து வேலையெல்லாம்எவன் செய்தால் நமக்கென்னவென்றுநாசுக்காய் நகர்ந்து கொண்டோம்!போட்டி தேர்வுகளுக்குபடிப்பதை விட்டு விட்டுபோராட்ட களத்தில்புகுந்து விட்டோம்!வட மாநிலக்காரன்வந்து விட்டான்அய்யகோ...அடித்துக் கொள்வோம்வடக்கு வாழ்கிறதாம்தெற்கு தேய்கிறதாம்!எம்.செல்வகுமார், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !