கவிதைச்சோலை!
விடியல்தானே வாசல் தட்டும்!* மனம் எட்ட முடியாதமலை முகடுதிருப்தி!* வயிறோடு வாழ்வதுகஷ்டமென்று கருதிபழைய இலக்கியம்பழி போட்டது!* மனதோடு மல்லுக்கட்டஅன்றைக்குஅதிகம் அவசியமில்லை!* வயிறு நிறைந்தால்வாழ்க்கை முடிந்தது!இன்றோ —இருக்கக் கைமண் இடம்சொந்தமாய் இல்லை!* வாழ்ந்தோர் குறைவு...தேவையும் குறைவு...மனது பெரிதாய்மலைப்பைத் தரவில்லை!* பண்டிகை வந்தால் மட்டுமேபட்சணம், புதுத்துணி...பணத்தைப் பெருக்கப்பந்தயம் அனுதினம்!* இருப்பதோ எதுவுமில்லை...பறப்பதைப் பிடிக்கபாடுகள் படுகிறோம்!* உஞ்சவிருத்தியால்உயிர் வளர்த்ததுஅந்தக் காலம்!* ஏழேழு தலைமுறைக்கும்சொத்துச் சேர்த்தும்தலைமுறை தன்பின்தன் தேவையைத்தானே தேடிடும் நம்பிக்கையின்றிஇன்னமும் தேடிடும்இழிநிலை இன்று!* அகராதியில் கூடஅகப்படாமல்அலைய வைக்கிறதுதிருப்தி!* போதும் என்பதுபுரிபடாமல் போவதால்,திருப்தி எதிலும்தென்படுவதில்லை!* வயிறைக் கூடசரிகட்டி விடலாம்...மனதை அடக்கும்மார்க்கம் என்ன?* நமக்கு அளந்ததுநன்மைக்கே என்றுநன்றியோடு நினைத்தால்...விடை தேடிவிரைய வேண்டாம்...விடியல் தானேவாசல் தட்டும்!— வளர்கவி, கோவை.