கவிதைச்சோலை!
நிழலுறவுகள்!முகம் காணாமல்முகநுாலில்முதல் வணக்கம்சொல்லுகிறோம்!இடம் தெரியாதஇனத்தவரோடுமுழு நேரம்'சாட்டிங்' செய்கிறோம்!வகை வகையாய்வசனங்கள் எழுதி'வாட்ஸ் - ஆப்'பில்வலம் வருகிறோம்!கண்டவரும் காணகாட்சிப் படத்தைசாட்சியாக்கிசந்தோஷம் கொள்கிறோம்!வேண்டாதவைகளைபதிவேற்றம் செய்துவிலாசம் தெரியாதவரிடம்விருப்பம் பெற்றுக் கொள்கிறோம்!சொந்தங்கள்சுற்றி இருந்தும்'சோஷியல் மீடியா'க்களில்சுற்றி வருகிறோம்!நிஜமில்லாதநிழல் உறவுகளோடுஎப்போதும்இணைந்து இருக்கும் நாம்எப்போதாவது வந்து போகும்உறவுகளை வரவேற்றுவார்த்தை ஒன்று பேசிவழியனுப்ப முடியாமல்வலம் வருகிறோம்திக்கற்றவர்களாக!அ. ரேவந்த், கொச்சி.