கவிதைச்சோலை!
பொய்மை புதைந்த பூவை நீ!* காதல் என்றசுண்ணாம்பு காளவாயைதிறந்து வைத்தாய்...இடறி விழுந்த என்னின்ஆயுள் குடித்தாய்!* உன் கலப்பட விழியைஎன்னில் திணித்தாய்...என் சுத்தமான காதலை,'தீ' நாவால் சுவைத்தாய்!* உன் ஒரு இதயத்தை வைத்துவாழ்ந்து முடித்து விட்டேன்...இனி, நான் சாவதற்காய்இன்னொரு இதயம் கொடு!* 'நம்பிக்கையற்ற'என்ற சொல்லுக்கு...அகராதியில்உன் பெயரைத்தான்சேர்த்திருப்பதாகஎனக்கொரு செய்தி!* நீயொரு காரியவாதி...உன்னை கட்டிக் கொண்டுபோன அவனும்...உன்னை வெட்டிக் கொண்டுவந்த நானும் - அப்பாவிகள்!* இதயம் துடிக்கும் என்றுஎனக்குத் தெரியும்...இதயம் நடிக்கும் என்றுஇப்போதுதான் உணர்ந்தேன்!* இதயம் தசையாலானதென்றுஎனக்குத் தெரியும்...இதயமும் இரும்பாக இருக்குமென்றுஇப்போதுதான் உணர்ந்தேன்!* வஞ்சமில்லாத உண்மை நான்...நெஞ்சமில்லாத பொய் நீ!* பூ என்றால்சிரிக்கக் கூடியது தானே...உன்னையும்பூவாகத்தான் நினைத்திருந்தேன்...அழ வைத்து விட்டாய்!* என்னை யாரும்அவ்வளவு எளிதில்வீழ்த்த முடியாதுஎன்றெண்ணியிருந்தேன்...உன் சின்ன புன்னகையாலேயேஎன்னை அழைத்துச் சென்றுபுதை குழிக்குள் தள்ளி விட்டாய்!* உன்னால் மட்டும்எப்படி முடிந்தது...ஒரே மைதானத்தில்இரண்டு விளையாட்டுக்களை ஆடிஇரண்டிலுமே ஜெயிக்க!— இளைய சாகுல், துபாய்.