உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

எதிர்காலம்* பறவை உதிர்த்தஒற்றை இறகாய்காற்றில் அலைகிறது...நம் தேடல்கள்!* பாழுங் கிணற்றில் போட்டகூழாங் கற்களாய்குவிந்து கிடக்கிறது...நம் லட்சியங்கள்!* நூலறுந்த பட்டமாய் போய் விடுமாதாயின் கனவுகள்...காதறுந்த ஊசியென ஆகிவிடுமாதந்தையின் கணிப்புகள்!* பகல் உணவென்பதுபகல் கனவானாலும்நிகழ்காலப் பசி இருட்டுக்குஅகல் விளக்கேற்றுவோம்!* வேற்றுக் கிரகம் வரைவெற்றிக் கொடி நாட்ட வந்த நாம்சோற்றுப் பருக்கையின்சுகமான நினைவிலாதோற்றுப் போவது?* நம்முகவரியை முன்மொழியஉதடுகளே இல்லாதவர்களிடமா ஒப்பாரி வைப்பது?* நம்கவிதைகள் அரங்கேற்றபாடைகளிடமாமேடை கேட்பது?* தொடர்ந்து ஜெயிக்காதுதோல்விகள்...தொடர்ந்து தோற்காதுவெற்றிகள்...வா... தோழா...இறந்த காலம் செலவாகட்டும்...எதிர்காலம் வரவாகட்டும்!— எஸ்.பி.நீலமேகன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !