கவிதைச்சோலை!
அங்கிருந்து கிடைக்கட்டும்!நான் உறவுகளுக்குஅடிமையில்லையெனச் சொல்லிஅடிமையாகிக் கிடக்கிறோம்இணையத்திற்குள்!நான் புகழுக்குஅடிமையில்லையெனச் சொல்லிஅடிமையாகிக் கிடக்கிறோம்அரங்கத்தின் மேடைகளில்!நான் பேராசைக்குஅடிமையில்லையெனச் சொல்லிஅடிமையாகிக் கிடக்கிறோம்பணத்திற்கான தேடலில்!நான் ஆடம்பரத்திற்குஅடிமையில்லையெனச் சொல்லிஅடிமையாகிக் கிடக்கிறோம்விலை உயர்ந்த பொருட்களுக்குள்!நான் பொறாமைக்குஅடிமையில்லையெனச் சொல்லிஅடிமையாகிக் கிடக்கிறோம்பிறரது வளர்ச்சி மீதானகாழ்ப்புணர்ச்சிக்குள்!நான் சோம்பலுக்குஅடிமையில்லையெனச் சொல்லிஅடிமையாகிக் கிடக்கிறோம்உழைக்காமல் பெற விரும்பும்பெரும் ஊதியத்தின் கனவிற்குள்!நான் ஊழலுக்குஅடிமையில்லையெனச் சொல்லிஅடிமையாகிக் கிடக்கிறோம்குறுக்கு வழியில்வெற்றி பெறும் சூழ்ச்சிக்குள்!இனியேனும்நம் அடிமைத்தனத்தை உணர்ந்துநான் அடிமையில்லை என்றவெற்று சொற்களுக்கு அடிமையாகாமல்அன்பிற்கும், பொது நலத்திற்கும்,உழைப்புக்கும் அடிமை ஆவோம்...அங்கிருந்து கிடைக்கட்டும்உண்மையான சுதந்திரம்!என். கீர்த்தி, சென்னை.