கவிதைச்சோலை!
ஆக., 22 - சென்னை தினம்!பல்லாண்டு வாழ்க!பதின்ம வயதிலிருந்து - இந்தஅரை நுாற்றாண்டு காலம்என் உயர்வு தாழ்வுக்குஉறுதுணையானஉற்ற நண்பன் நீ!அலை கடல் ஓரம்வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுநம்பிக்கை நாற்றைவிதைத்தவன் நீ!உன்னிடம் தஞ்சமடைந்தோர்வீணாய் போனதே இல்லை...சாதனையாளர்களாய்மிளிர வைத்தமித்ரன் நீ!உனக்கு வரலாறு ஏதுமில்லைஒண்ட வந்தவர்களின் கூடாரம் - எனஎகத்தாளம் பேசியேவீணாகி போயினர் பலர்...நம்பிக்கை வைத்தவர்களைஏற்றம் காணவித்திட்டவன் நீ!உன் சரித்திர சாதனைபக்கங்களை அறிந்தஎன்னை போன்றோரின்கலங்கரை விளக்கம் நீ!எத்தனை எத்தனை இடர்கள்இன்னும் இருக்கிறது அழிவு - எனகாலம் எள்ளி நகையாடினாலும்நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும்கம்பீரமானவன் நீ!நான்கு திசைகளிலும் - உன்கரங்களை நீட்டிவாழ்க்கைத் தேடிவந்தோரை அரவணைக்கும்ஆபத்பாந்தவன் நீ!'மஞ்சா பை' சகிதம் வந்தவர்களை'அமெரிக்கன் டூரிஸ்டர்'ஏந்த வைத்தசுமைதாங்கி நீ!'உயர்வு பெற வேண்டுமா...வாய்ப்பை உருவாக்கிக் கொள்...'- சொன்னார் பெர்னாட்ஷா...நீயோ, வாய்ப்பு புதையல்அவரவர் விரும்பியதைஅள்ளித் தந்தபுரவலன் நீ!அண்டி வந்தவர்களுக்குஆத்ம நண்பன்அழிக்க வந்தவர்களுக்கோ'அனக்கோண்டா!'வள்ளுவர், வள்ளலார்ஞானசம்பந்தர், பாரதியார் - இப்படிஉன்னில் கலந்தவர்களால்உலகுக்கு ஒளிவிளக்கானாய் நீ!உனக்கு ஒரு சீரழிவு என்றால்சீறி எழ மாட்டோமா...தாங்கிப் பிடிக்கலட்சோப லட்ச கரங்கள்நீட்ட காத்திருக்கின்றன!விழும்போதெல்லாம்மீண்டெழும் யுக்தி அறிந்தவன்...என்றுமே நட்சத்திரமாய் ஜொலிக்கும் துருவன் நீ!எனதருமை சென்னையேவாழிய நீ பல்லாண்டு!செல்வி நடேசன், சென்னை.