கவிதைச்சோலை!
தைரியம் இல்லையென்றால்!மனமே ஆலயம்தைரியமே கடவுள்கடவுள் இல்லாஆலயம் சிறக்காது...அது போல், தைரியம் இல்லாவாழ்வும் சிறக்காது!மனமே மரம்தைரியமே நீர்நீர் இன்றிமரம் வளராது...அது போல்,தைரியம் இன்றிவாழ்க்கையும் வளராது!மனமே இருள்நிலவே தைரியம்இருள் இன்றிநிலவு ஜொலித்திடாது...அது போல்,நல்ல மனம் இன்றிதைரியம் பிறந்திடாது!தைரியம் இல்லையென்றால்தைரியத்தின் எதிரிநம்முள் எட்டிப் பார்க்கும்நம்மை தட்டிப் பார்க்கும்!கூட்டத்தில் கூச்சம் தரும்தனிமையில் சோகம் தரும்தோல்வியில் துயரம் தரும்வெற்றியை துார தள்ளும்!தைரியம் இல்லையென்றால்பயமே நம்மை ஆளும்நமது சுயமேபயமாய் மாறும்!நம்மை அழிக்கும் பயத்தைநாம் அழிப்போம்...நம்மை வளர்க்கும் தைரியத்தைநம்முள் வளர்ப்போம்!தைரியம் இல்லையென்றால்தடம் பதிக்க முடியாது...பயம் இல்லையென்றால்தடம் பதிப்பதை நிறுத்த முடியாது!ம.போ.சாந்தகுமார், புதுச்சேரி.