கவிதைச்சோலை!
மனம் வேண்டும்!ஆறுதல் சொல்லமனம் வேண்டும்அழுகிற போதெல்லாம்!கொடுத்துதவும்மனம் வேண்டும்குறையெனும் போதெல்லாம்!தேற்றுகிறமனம் வேண்டும்நொடிந்திடும் போதெல்லாம்!போற்றுகிறமனம் வேண்டும்வெற்றியின் போதெல்லாம்!அரவணைக்கும் மனம் வேண்டும்தலைவனெனும் போதெல்லாம்!திருந்திடும் மனம் வேண்டும்தவறெனும் போதெல்லாம்!வருந்திடும்மனம் வேண்டும்தப்பெனும் போதெல்லாம்!துணிந்திடும்மனம் வேண்டும்துவண்டிடும் போதெல்லாம்!கனிந்திடும்மனம் வேண்டும்பேசிடும் போதெல்லாம்!பக்குவமானமனம் வேண்டும்பகை வரும்போதெல்லாம்!தெய்வத்தின்மனம் வேண்டும்மனிதனெனும் போதெல்லாம்!கவியரசன், கடம்பத்துார்.