கவிதைச்சோலை!
மன்னிப்பு!* உன்னைக் கரம் பற்றியநாள் முதலாய்என் வாழ்க்கைத் தரம்உயர்ந்தது!* கண் போல் என்னையும்,பிள்ளைகளையும்காக்கிறாய்...அன்பால் அனைவரையும்ஈர்க்கிறாய்!* முகமறிந்து நடக்கிறாய்...தும்மல் வந்தாலும்துடிக்கிறாய்...துவளும் போதுதோள் கொடுக்கிறாய்!* பசி வந்து பார்த்ததில்லைஅழுக்காடை அணிந்ததில்லைநோய் வந்து துடித்ததில்லைதாய் மனம் கோணியதில்லை!* பேரன் - பேத்திஎடுத்த பின்னும்கத்துவதையும்,உன்னைத் திட்டுவதையும்விடாத என்னிடம்...* மந்திரியாய், நண்பனாய்ஆசானாய், தாதியாய்இன்றளவும் நம் இல்லறத்தில்இனிமை சேர்க்கிறாய்!* இதுவரை, ஒரு நாள் கூடஉன்னைப் பாராட்டியதில்லைபோற்றியதில்லை, புகழ்ந்ததில்லை...மதித்ததில்லை, வாழ்த்தியதில்லை!* எல்லாவற்றிற்கும் சேர்த்துஉன்னிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்...உன் காலைத் தொட்டுநீ தூங்கும் போது...உனக்குத் தெரியாமல்!— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.