உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இளமையும், முதுமையும்!புது ஆண்டு பிறந்து விட்டதுஇதன் வயது இருபத்து ஒன்றுஇந்த நுாற்றாண்டின் கணக்குப்படி!இளமையும், முதுமையும்வயதைப் பொறுத்தது அல்லஅது, அவரவர் மனநிலையை பொறுத்தது!வயதானால் தோல் சுருங்கலாம்மனம் சுருங்க வேண்டியதில்லைஎன்றும் மனதில் உறுதியுடன் இருக்கலாம்!80 ஆண்டு மனிதனும்பயமின்றி, வீரத்தோடு தீரனாக வாழலாம்20 ஆண்டு வாலிபனும்கோழையாக சுருண்டு இருக்கலாம்!இளமை, புதியதை நாடுகிறதுமாற்றத்தை கண்டு அஞ்சுவதில்லைவாழ்க்கை படகை கொந்தளிக்கும் கடலில்அனுபவமாக கொண்டு செல்கிறதுஇதுதான் இளமையின் இலக்கணம்; வயதல்ல!எண்பதோ, இருபதோஎவர் வாழ்க்கை வீண் என்று நினைக்கிறாரோஅவரே என்றும் முதியவர்!எண்பதோ, இருபதோஎவர் வாழ்க்கை வாழ்வதற்கேஎன்று நினைக்கிறாரோஅவரே என்றும் இளைஞர்!ச. ரங்கராஜன்,ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !