உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

இப்படி இருங்கள்!சொல்லாய் இருங்கள்சுடுசொல்லாய் சுட்டெரிக்காமல்சுவை கூட்டி சொக்க வைக்கும்சொல்லாய் இருங்கள்!முள்ளாய் இருங்கள்காலில் குத்துவதாய் இல்லாமல்காலம் காட்டும்கடிகார முள்ளாய் இருங்கள்!மரமாய் இருங்கள்உயரமாய் வளர்ந்தும்ஒன்றுக்கும் உதவாதஅசோக மரமாய் இல்லாமல்பலருக்கும் உதவும்பழ மரமாய் இருங்கள்!காகமாய் இருங்கள்தான் மட்டும் உண்ணும்திருட்டுக் காகமாய் இல்லாமல்பகிர்ந்து உண்ணும் காகமாய் இருங்கள்!மழையாய் இருங்கள்கடலில் பெய்து கலந்துபோகாமல்வயல்வெளிகளில் பெய்துவளம் சேர்க்கும் மழையாய் இருங்கள்!செடியாய் இருங்கள்அழகுக்கான குரோட்டன்சாக இல்லாமல்நோய்க்கு மருந்தாகும்மூலிகைச் செடியாய் இருங்கள்!கற்களாய் இருங்கள்கலைந்து கிடக்கும் கூழாங்கற்களாய் அல்லபட்டை தீட்டி பளபளக்கும்வைரக் கற்களாய் இருங்கள்!நெருப்பாய் இருங்கள்கண்டதை எரித்து நாசம் செய்யாமல்கட்டுக்குள் இருந்து உதவும்கருணை நெருப்பாய் இருங்கள்!காற்றாய் இருங்கள்புரட்டிப் போட்டு நாசம் செய்யும்புயலாய் இல்லாமல்வருடிச் செல்லும் தென்றலாய் இருங்கள்!மூங்கிலாய் இருங்கள்மூர்க்கமாய் தாக்கும் லத்தியாய் இல்லாமல்பொங்கும் இசை பொழியும்புல்லாங்குழலாய் இருங்கள்!பேனாவாக இருங்கள்கண்டதையெல்லாம் கிறுக்கிகாகிதத்தை குப்பையாக்காமல்காவியம் படைக்கும்பேனாவாக இருங்கள்!இளசை சுந்தரம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !