உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

விலக்கி வைப்போம்! நம் முன்னோர் வெட்டி விடாதமரங்கள் தான்இன்று நாம் இளைப்பாறும்நிழலை விட்டு வைத்தது!நம் முன்னோர் துார்க்காதகிணறுகளும், குளங்களும் தான்இன்று நாம் தாகம் தீர்க்கத்தண்ணீரை விட்டு வைத்தது!நம் முன்னோர் ஆக்கிரமிக்காதவெட்டவெளி தான்இன்று நாம் விளையாடும்மைதானங்களை விட்டு வைத்தது!நம் முன்னோர் அழிக்காதவயல்களும், தோப்பும் தான்இன்று நாம் பசியாறும்உணவை விட்டு வைத்தது!நம் முன்னோர் விலக்கியபுகையும், மதுவும் தான்இன்று நம் உடலுக்கானஆரோக்கியத்தை விட்டு வைத்தது!நம் முன்னோர் விலக்கியஆடம்பரமும், பகட்டும் தான்இன்று நாம் குறையின்றிவாழ்வதற்கான வசதியை விட்டு வைத்தது!எதையெதைவிலக்க வேண்டுமென்றஅறிவுரையை அவர்கள் எழுதி மட்டும் போகவில்லைவாழ்ந்து காட்டி போயினர்!இன்று நாம்விலக்க வேண்டியவைஎன்னவென்று யோசித்துவிலக்கி வைப்போம்...நம் வழித்தோன்றல்களும்நம்மைப் போல வாழ்வதற்கு!கீர்த்தி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !