கவிதைச்சோலை!
விட்டில் பூச்சிகளுக்கு ஆயுசு கெட்டி!விட்டில் பூச்சிகளுக்குஆயுசு கெட்டிஅவை விளக்கில் விழுந்துசெத்துப் போவதில்லை!ஏனென்றால்,விளக்கேத்தும் கலாசாரம்இப்போதெல்லாம்விரிசலாகிப் போனதால்!முள்ளில் விழுந்த சேலையைமெதுவாய் தான்எடுக்க வேண்டுமென்பதில்லைஇப்போதெல்லாம்சேலைகள் மின் விசிறியால்உலர்த்தப்படுவதால்!கிராமத்து வீதிகளில்வண்டித்தடம் மறைந்தே போனதுஅதுவேவாழ்வின் வளமைவறண்டு போகவும் காரணமாயிற்று!தும்மல் விழுந்தால் கூடதாயும், தந்தையும்நினைப்பதாக நினைக்கும்நிர்மலமான அன்புநிலையானதாகவே வேண்டும்!கடும் ஜுரமானாலும்கடும் குளிரானாலும்தேன் கலந்தசெந்துாரப் பொடியைவெற்றிலையில் வைத்துநக்கித் தின்றுநோய் தீர்த்த நாள்நொடியில் மலர வேண்டும்!கூரையில் காகம் கரைந்தால்விருந்து வருமெனஆருடம் பேசி ஆனந்தப்பட்ட நாள்அப்படியே மீளவும்அனுபவப்படல் வேண்டும்!மாற்றுத் துணி இல்லாதகாலங்களில்மலர்ந்து கிடந்த மாண்புகள்மறுபடியும்மலர்ந்திட வேண்டும்!அங்கே...மண் செழிப்புற வேண்டும்மானுடம்வாழ வேண்டும்!சு. கந்தன், மேலச்செவல்