கவிதைச்சோலை!
அப்பாவின் மஞ்சள் பை!இது பணப்பை அல்லஏழைகளுக்கு உதவும் கர்ண பைஅப்பாவின் ஆன்மாவுடன் கலந்தபுண்ணிய பை!எத்தனை மாற்றங்கள் வந்தாலும்துவைத்து துவைத்து மெருகு குறைந்தாலும்இறுதி வரை அப்பாவுடன்பயணித்த மனிதநேய பை!மூக்குக்கண்ணாடிக்கும், கவிதைத்தாள்களுக்கும்அடைக்கலம் தரவில்லைபேருந்தின் இருக்கையை முன்பதிவு செய்த அதிசய பை!அமெரிக்க டூரிஸ்டர் - அரிஸ்டோகிராட் - வி.ஐ.பி.,விதவிதமான, 'பிராண்டுகள்' மார்க்கெட்டில்தனித்து நிற்பதென்னவோ மஞ்சப் பையே!சாயம் மங்கினாலும்காதறுந்தாலும் அப்பாவால்புத்துணர்வு பெற்றுஇறுதி வரை உற்ற தோழனாய்பவனி வந்ததும் மஞ்சப்பையே!பூட்டு - சாவி வேண்டாம்மூச்சு முட்டும், 'ஜிப்' தேவையில்லைசக மனிதரின் நேர்மையைபறைசாற்றும் பாசமிகு பை!மஞ்சள் பை - அப்பாவின் மூன்றாவது கைகிராமத்து அப்பாக்களின் நம்பிக்கைஎளிமையின் வலிமை காட்டும் தும்பிக்கை!உலகம் போற்றும் தமிழனின்முத்திரை பதிக்கும்கலாசார பை!மறு பிறவி எடுத்து வந்த மஞ்ச பையேஅப்பாவையும் மீண்டும் அழைத்து வா...மறதி நோய் பாதித்த மனைவியும்மறக்காத புத்திரர்களும்அவருக்காக காத்திருக்கிறோம்!மருத்துவர் ஜெ.சங்குமணி, மதுரை.